TNPSC Current Affairs 23-24th February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 23-24, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
ISRO-வின் SSLV ராக்கெட்டுகள்
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) எடை குறைந்த செயற்கைகோள்களை சுமந்து செல்வதற்கு என குறைவான எடை கொண்ட ராக்கெட்டுகளை தயாரிக்க உள்ளது. 
  • SSLV (Small Satellite Launch Vehicle) என பெயரிடப்பட்டு உள்ள இந்த ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்து உள்ளன.
  • முதல் SSLV ராக்கெட் வருகிற ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவப்படும். இதில் பாதுகாப்புத்துறைக்கான 2 சிறிய செயற்கைகோள்கள் செலுத்தப்படும்.
  • இந்த செயற்கைக்கோள் ஒவ்வொன்றும் தலா 120 கிலோ எடை இருக்கும். அத்துடன் சுமார் 300 கிலோ எடை கொண்ட துணைக்கருவிகளையும் சேர்த்து மொத்தம் சுமார் 500 கிலோ சுமையை இந்த ராக்கெட் சுமந்து செல்லும். மொத்தத்தில் ராக்கெட்டின் எடை 110 டன்னாக இருக்கும்.
  • ஹீப்ரு மொழியில் தோற்றம் என்ற பொருள் தரும் பெயரைக் கொண்ட பெரஷீத் விண்கலம், இஸ்ரேலின் ஸ்பேஸ்-ஐஎல் என்ற லாப நோக்கற்ற தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். 
பிரதமரின் விவசாயி உதவித் தொகை (PM-KISAN scheme) திட்டம் - தொடக்கம் 
  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கும் (PM-KISAN scheme) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2019 பிப்ரவரி 24 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
  • ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.2,000 வரவு வைக்கப்படது. 
  • நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 விதம், 3 தவணைகளாக ரூ.6,000 வரவு வைக்கப்படும். 
  • உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை 24.2.2019 அன்று அளிக்கப்படும். 
  • 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மேலும் ஒரு கோடி விவசாயிகளுக்கு, 2 அல்லது 3 நாள்களில், முதல் தவணையாக ரூ.2,000 அளிக்கப்படும். 
இமாசலப் பிரதேசத்தில் "பசு நல அறக்கட்டளை" அமைப்பு
  • இமாசலப் பிரதேசத்தில் "கௌ சேவா ஆயோக்" (Gau Seva Aayog) என்ற பெயரில் பசு நல அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த அறக்கட்டளைக்கு கால்நடைத்துறை அமைச்சர் வீரேந்தர் குமார் தலைமை வகிப்பார். இந்த அறக்கட்டளையின் தலைமையகம், சிம்லாவில் இருக்கும். 
தமிழ்நாட்டு நிகழ்வுகள் (Tamil Nadu Affairs)
போட்டித்தேர்வுக்கு பயன்படும் "மெய்நிகர் கற்றல் வலைதளம்"
  • கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில், மெய்நிகர் கற்றல் வலைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பிப்ரவரி 22 அன்று சென்னை தலைமை செயலகத்தில் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
  • மெய் நிகர் கற்றல் வலைதளம்
    • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் www.tamilnaducareerservices.gov.in என்ற மெய்நிகர் கற்றல் வலைதளம் (Virtual Learning Portal), 1 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
கவின்கலைப் பல்கலைக்கழக நிறுவனர் தினவிழா 'ஜெயம் 2019' 
  • தமிழ்நாடு இசை, கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 'ஜெயம் 2019' நிறுவனர் தினவிழா 2019 பிப்ரவரி 23 அன்று நடைபெற்றது. 
  • தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோற்றுவித்தார்.
  • படைப்பாக்கம், இசைக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்கான சிறப்புப் பட்டியலில் இப்போது உலக அளவில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது.
நியமனங்கள்/ Appointments 
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக "கெல்லி நைட் கிராஃப்ட்" நியமனம்
  • ஐ.நா. சபைக்கான புதிய அமெரிக்க தூதராக "கெல்லி நைட் கிராஃப்ட்" நியமிக்கப்பட்டுள்ளார். 
"RIC" அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 2019
  • இரஷ்யா-சீனா-இந்தியா நாடுகள் இணைந்த "RIC" ( Russia-India-China) அமைப்பின், 16 ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் சீனாவின் பெருநிலப்பகுதியில் வூசென் (Wuzhen) நகரில், 2019 பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது.
  • 16th Russia-India-China (RIC) Foreign Ministerial Meeting, 27 February 2019, Wuzhen, China.
  • இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
விருதுகள்/ Awards and Honors
2018 சியோல் அமைதி விருது: பிரதமர் நரேந்திர மோடி
  • சியோல் அமைதி விருது கலாசார அறக்கட்டளை சார்பில் 22.2.2019 அன்று, சியோல் நகரில், பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான "சியோல் அமைதி விருது" (Seoul Peace Prize for 2018) வழங்கப்பட்டது.
  • சியோல் அமைதி விருது (1990)
    • 1990 ஆம் ஆண்டு முதல் சியோல் அமைதி விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பெறுவது 14-வது சியோல் அமைதி விருது ஆகும். 
    • 24-வது ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியா நாட்டின் சியோல் நகரில் கடந்த 1990-ம் ஆண்டு நடந்தது. இந்த போட்டிகள் வெற்றிகரமாக அமைந்ததன் நினைவாக அமைதி விருது ஒன்றை கொரிய அரசு நிறுவியது. 
  • பிரதமர் மோடி தென்கொரியா பயணம்
    • பிரதமர் மோடி 2 நாள் பயணமாக 21.2.2019 அன்று தென்கொரியா சென்றார். தென்கொரியாவின் சியோல் பல்கலைக்கழகத்தில் காந்தியடிகள் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
    • இந்த விருதுடன் வழங்கப்பட்ட 2 லட்சம் டாலரை (சுமார் ரூ.1½ கோடி) கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
    • இருநாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியின. அந்த வகையில் உள்கட்டமைப்பு, வளர்ச்சி, ஊடகம், ஸ்டார்ட்-அப் திட்டங்கள், எல்லை தாண்டிய மற்றும் சர்வதேச குற்றத்தடுப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
  • சியோல் அமைதி விருது பெற்றோர் விவரம் (1990-2018)
அமைதி விருது (1990-2018)
வ.எண்
ஆண்டு
விருது பெற்றவர்
நாடு
1
1990
ஜுவான் அன்டோனியோ சமாரன்  
ஸ்பெயின்
2
1992
ஜார்ஜ் ஷெல்ட்ஸ்
அமெரிக்கா
3
1994
மேடேசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ்
சுவிற்சர்லாந்து  
4
1998
கோபி அன்னான்
கானா
5
2000
சதகோ ஒகடா
ஜப்பான்
6
2002
ஆக்ஸ்பாம்
ஐக்கிய ராஜ்யம்
7
2004
வால்லாவ் ஹேவெல்
செக் குடியரசு
8
2006
முகமது யூனுஸ்
வங்காளதேசம்
9
2008
அப்துல் சதர் எடி
பாக்கிஸ்தான்
10
2010
ஜோஸ் அன்டோனியோ அபுரே
வெனிசுலா
11
2012
பான் கீ மூன்
தென் கொரியா
12
2014
ஏஞ்சலா மேர்க்கெல்
ஜெர்மனி
13
2016
டெனிஸ் முகாவெ  
காங்கோ  
14
2018
நரேந்திர மோடி
இந்தியா

வேலுார் மாவட்டத்துக்கு, வெப் ரத்னா தங்க விருது
  • புதுடெல்லியில், 22.2.2019 அன்று நடந்த விழாவில், வேலுார் மாவட்டத்துக்கு, வெப் ரத்னா தங்க விருது (Web Ratna Awards 2019) வழங்கப்பட்டது. 
  • மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை,வேலுார் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு வழங்கினார்.
  • வேலுார், கணினி மயமாக்கப்பட்ட தகவலை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  
  • தென் மாநிலங்களில், உடனுக்குடன் அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதில், வேலுார் மாவட்டம் முன்னணியில் திகழ்கிறது. 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
T20 போட்டிகளில்அதிக ரன்கள்: ஆப்கானிஸ்தான் உலக சாதனை
  • ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரின், 2-வது சர்வதேச 20 ஓவர் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, படைத்துள்ள சாதனைகள் விவரம்:
  • ஆப்கானிஸ்தான் அணியின் ஹஸ்ரத்துல்லா ஜஜாய், உஸ்மான் கானி இணை, முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது.
  • 20 ஓவர் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் 
  • ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
  • ஹஸ்ரத்துல்லா ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் (16 சிக்சர்) என்ற சாதனையை படைத்தார்.
தென்ஆப்பிரிக்காவில் "முதல் முறையாக டெஸ்ட் தொடரை" வென்ற இலங்கை அணி
  • இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2019, தென்ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்றது. இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. 
  • தென்ஆப்பிரிக்க மண்ணில், "ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரு அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறை"யாகும். 
கைப்பந்து

புரோ கைப்பந்து லீக் 2019: "சென்னை ஸ்பார்ட்டன்ஸ்" சாம்பியன் 

  • முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியில் "சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி" சாம்பியன் பட்டம் வென்றது 
  • சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 22.2.2019 அன்று நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 15-11, 15-12, 16-14 என்ற நேர்செட்டில், கோழிக்கோடு ஹீரோஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது 
  • 6 அணிகள் பங்கேற்ற முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சி மற்றும் சென்னை நகரங்களில் நடைபெற்றது. 
  • இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி, ஆண்களுக்கான ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஒலிம்பிக்

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த தடை
  • இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது.
  • டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா அளிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 2019, டெல்லி 
  • அபுர்வி சண்டிலா - தங்கப்பதக்கம் 
    • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இபோட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில், இந்திய வீராங்கனை அபுர்வி சண்டிலா 252.9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்று, புதிய உலக சாதனையும் படைத்தார். 
    • 2018 ஆம் ஆண்டு சாங்வானில் நடந்த உலக போட்டியில் சீன வீராங்கனை ரோஷூ ஜாவ் 252.4 புள்ளிகள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அபுர்வி சண்டிலா முறியடித்துள்ளார். 
    • அபுர்வி சண்டிலா ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர். அபுர்வி சண்டிலா, உலக கோப்பை போட்டியில் வென்ற 3-வது பதக்கம் இதுவாகும்.
TNPSC Current Affairs 23-24th February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post