TNPSC Current Affairs 13th February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers


TNPSC Current Affairs February 13, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள்/ National Affairs 
உத்தரகண்ட்டில் "மேக கண்காணிப்பகம்"
  • உத்தரகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கர்வால் (Tehri Garhwal) மாவட்டத்தில் மேக கண்காணிப்பகம் (Himalayan Cloud Observatory) அமைக்கப்பட்டுள்ளது. 
  • இமாலய பிராந்தியத்தில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் மேகம் வெடிப்பு நிகழ்வுகள் கண்காணிக்க மற்றும் சேதம் குறைக்க உதவும் வகையில் இந்த கண்காணிப்பகம், தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் Badshithaul, Chamba என்ற இடத்தில் SRT வளாகத்தில், நிறுவப்பட்டுள்ளது. 
  • இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் IIT கான்பூர் ஆகிய அமைப்புகள் மூலம் மேகங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நாட்டின் இரண்டாவது மேக கண்காணிப்பகம் இதுவாகும். 
  • நாட்டின் முதலாவது மேக கண்காணிப்பகம், கேரளாவின் மூணாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 
நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம் - திறப்பு
  • நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 12.1.2019 அன்று திறந்து வைத்தார். 
  • பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், 1996 (13 நாட்களும்), 1998-99 (13 மாதங்களும்) மற்றும் 1999-2004 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பிரதமராக பதவி வகித்தார். 
  • 2018 ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வயது காலமானார். 
"Law, Justice and Judicial Power-Justice P N Bhagwati’s Approach" புத்தகம் வெளியீடு 
  • "Law, Justice and Judicial Power – Justice P N Bhagwati’s Approach" என்ற புத்தகத்தை பேராசிரியர் (டாக்டர்). மூல் சந்த் சர்மா (Mool Chand Sharma) எழுதி அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. 
அபுதாபி நீதிமன்றங்களில் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக "இந்தி" சேர்ப்பு 
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின், அபுதாபி நீதித்துறை (Abu Dhabi Judicial Department), அதன் நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் அரபு மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றோடு மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியை, சேர்க்க முடிவு செய்துள்ளது.
விருதுகள்/ Awards
பத்ம விருதுகள் பயன்பாடு - குறிப்புகள் 
  • பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய தேசிய விருதுகள் அரசியல் சாசன விதிகள் 18 (1)-ன்படி விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாலோ, பெயருக்கு பின்னாலோ விருதுகளின் பெயர்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. 
  • அப்படி தவறாக பயன்படுத்தினால், விருது பெற்றவர் அந்த உரிமையை இழந்தவர் ஆகிறார். விருது பெற்றவர்கள் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ விருதுகளை சேர்க்க வேண்டாம். என்று நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்தார். 
  • 1955-ம் ஆண்டில் இருந்து 2019 வரை பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷண் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப் பட்டுள்ளவர்கள் விவரம்:
    • பாரத ரத்னா விருது - 38 பேர் 
    • பத்ம விபூஷண் - 307 பேர் 
    • பத்மபூஷண் - 1,255 பேர் 
    • பத்மஸ்ரீ விருதுகள் - 3,005 பேர் 
மாநாடுகள்/ Conferences 
ஆசியான்-இந்தியா இளைஞர் உச்சிமாநாடு 2019
  • இரண்டாவது ஆசியான்-இந்தியா இளைஞர் உச்சிமாநாடு, அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில், 2019 பிப்ரவரி 03முதல் 06 வரை நடைபெற்றது. "Connectivity is the pathway to shared prosperity" என்ற மையக்கருத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. (2nd ASEAN-India Youth Summit 2019, Guwahati, Assam).
சர்வதேச எண்ணெய் & எரிவாயு மாநாடு - PETROTECH 2019 - குறிப்புகள் 
  • சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு "PETROTECH 2019", உத்திரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா நகரில் (புது டெல்லி தலைநகர் பகுதி) பிப்ரவரி 10 முதல் 12 வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஆற்றிய உரையின் குறிப்புகள்:
  • அண்மையில் உலகின் 6-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து சாதனை படைத்தது. 2030-ஆம் ஆண்டில் உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ஆவது இடத்தைப் பிடிக்கும்.
  • சர்வதேச அளவில் எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. 
  • உயிரி எரிபொருள் துறையில் இந்தியா வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளது. 11 மாநிலங்களில் நவீன உயிரி எரிபொருள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
  • இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த "PETROTECH" மாநாடு, 13-வது மாநாடு ஆகும். 
  • இந்திய ஹைட்ரோகார்பன் துறையின் முக்கிய நிகழ்வான, "PETROTECH" மாநாடு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் (Indian hydrocarbon sector), தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் அறிவு, நிபுணத்துவம், அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 13-வது நிகழ்வு ஆகும். PETROTECH-2019’, 10th - 12th February 2019 at India Expo Centre, Greater Noida-Delhi NCR, India.
உலகத்தமிழ் இணைய மாநாடு 2019, சென்னை
  • அண்ணா பல்கலைக்கழகமும், உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மையமும் இணைந்து 2019 உலகத்தமிழ் இணைய மாநாட்டை,சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துகின்றன. 2019 பிப்ரவரி 20-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது
  • "தானியங்கி கருவியில் தமிழ் மொழி பயன்பாடு" என்பது மாநாட்டின் மைய கருத்தாக இருக்கிறது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் தமிழின் பயன்பாடு எப்படி உள்ளது என்பதையும் இந்த மாநாடு மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
பொருளாதார நிகழ்வுகள்/ Economic Affairs
இந்திய ஸ்டேட் வங்கிக்கு (SBI) ரூ. 1 கோடி அபராதம் 
  • 1949 ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47A-ன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக, இந்திய ஸ்டேட் வங்கிக்கு (SBI), ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள்ளது. (Banking Regulation Act of 1949,Section 47A).
ஈடு வைக்காத விவசாய கடன் வரையறை - ரூ 1.6 லட்சமாக உயர்வு 
  • சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஈடு வைக்காத விவசாய கடனுக்கான வரையறையை (collateral-free agriculture loans), ரூ. 1 இலட்சதிலிருந்து ரூ 1.6 லட்சமாக உயர்த்தியுள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்/ Environmental Affairs
மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் "நிலநடுக்கம்"
  • பிப்ரவரி 12 அன்று (13.2.2019) காலை 7.02 மணியளவில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே, வடகிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்துக்கு கீழ் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. 
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது.
  • வடக்கு அந்தமான், போர்ட்பிளேர் மற்றும் சென்னையில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகி இருக்கின்றன. கடல் மட்டத்துக்கு கீழே ஏற்பட்டதால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. இந்த நிலநடுக் கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
டேபிள் டென்னிஸ் 
டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் 2019, சென்னை
  • இரண்டாவது டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி 2019, சென்னை அண்ணாநகரில் பிப்ரவரி 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. (Table Tennis Super League, TTSL-2019).
TNPSC Current Affairs 13th February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post