TNPSC Current Affairs 1st February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 1, 2019Current Affairs 1st February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக நிகழ்வுகள்/ International Affairs
சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டு 2019
  • UNESCO அமைப்பு 2019-ஆம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டாக (The International Year of the Periodic Table 2019) அறிவித்துள்ளது.
  • தனிம வரிசை அட்டவணை கண்டறிந்த "டிமிட்ரி மெண்டலீவ்"
  • 1869 ஆண்டு ரஷ்ய அறிவியலாளர் டிமிட்ரி மெண்டலீவ் அவர்களால் தனிம வரிசை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டது. 
  • 2019 ஆம் ஆண்டு தனிம வரிசை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்ட 150 வது ஆண்டு ஆகும். 
  • இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பு "2019-ஆம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டாக (IYPT2019)" என அறிவித்துள்ளன.
International Year of the Periodic Table 2019
  • A Common Language for Science
  • The Periodic Table of Chemical Elements is one of the most significant achievements in science, capturing the essence not only of chemistry, but also of physics and biology.
  • 1869 is considered as the year of discovery of the Periodic System by Dmitri Mendeleev. 2019 will be the 150th anniversary of the Periodic Table of Chemical Elements and has therefore been proclaimed the "International Year of the Periodic Table of Chemical Elements (IYPT2019)" by the United Nations General Assembly and UNESCO.
UAE and Saudi Arabia நாடுகளின் "Aber" டிஜிட்டல் நாணயம் 
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா (UAE and Saudi Arabia) ஆகிய நாடுகள் இணைந்து "அபெர்" (Aber) என்ற பொதுவான டிஜிட்டல் நாணயத்தை (common digital currency) அறிமுகப்படுத்தியுள்ளன. 
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் தமிழ் மாணவி "சியோபன் ஞானகுலேந்திரன்" 
  • பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், திறமைமிக்க இரு மாணவர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் கீழ், சியோபன் ஞானகுலேந்திரன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த டியானா ஆகியோர் தேர்வாகியுள்ளார். 
  • சியோபன் ஞானகுலேந்திரன் லண்டனில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார்.
  • சர்வதேச விண்வெளி ஓடத்தில் பல நாட்கள் தங்கியிருந்து, இருவரும் நுண்ணுயிரிகள் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளனர்.
Time 25 most influential teens of 2018
  • "டைம்' இதழ் 2018- ஆம் ஆண்டின் "உலகில் மிகவும் செல்வாக்குள்ள இளைய தலைமுறை "பட்டியலை டிசம்பர் வெளியிட்டுள்ளது. (TIME magazine's 25 most influential teens of 2018)
  • இப்பட்டியலில் இந்திய இளந்தலை முறையினர் மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர். 
    1. காவ்யா கோப்பரப்பு (Kavya Kopparapu) 
    2. அமிகா ஜார்ஜ் (Amika George) 
    3. ரிஷப் ஜெயின் (Rishab Jain)
  • இந்திய இளந்தலை முறையினர் - பட்டியலில் இடம்பிடித்த காரணம்:
  • காவ்யா கோப்பரப்பு 
    • காவ்யா கோப்பரப்பு மூளையைப் பாதிக்கும் புற்று நோய் குறித்து ஆய்வு நடத்தி வருபவர். 
  • அமிகா ஜார்ஜ் 
    • இங்கிலாந்தில் பெண்களுக்குள்ள பிரச்னைகள், நாப்கின் வாங்க இயலாத "பொருளாதாரம்' குறித்த விழிப்புணர்வு 
  • ரிஷப் ஜெயின்
    • பித்தப்பையில் உருவாகும் புற்று நோயை குணப்படுத்தும் கணினி மென்பொருள் தயாரிப்பு. 
இந்திய நிகழ்வுகள்/ National Affairs
உத்தரகண்டில் அமையும் இந்தியாவின் "இரண்டாவது துலிப் பூங்கா"
  • இந்தியாவின் "இரண்டாம் துலிப் மலர் பூங்கா", உத்தரகண்ட் மாநிலத்தில், பித்தோராகர் மாவட்டத்தில் சண்டக் மலை முகட்டில், 50 ஹெக்டேர் நிலத்தில் அமைகிறது. (India’s second Tulip Garden, Pithoragarh district of Uttarakhand).
  • இந்தியாவின் "முதலாவது துலிப் மலர் பூங்கா", ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகறில் அமைந்துள்ளது. 
போலியோ சொட்டு மருந்து முகாம்-மார்ச் 10, 2019
  • 2019 போலியோ சொட்டு மருந்து முகாம் 2019 மார்ச் 10 ல் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. (polio drops 2019 date, polio vaccine date 2019, March 10, 2019).
  • ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரியில் இரு கட்டங்களாக தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும். சுகாதாரம், கல்வி, சமூக நலம் போன்ற துறைகள் இணைந்து செயல்படுகிறது.
  • ஒன்று முதல் ஐந்து வயதிற்குட்பட்டவர்களுக்கு கல்வி நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம் அமைத்து சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை: 119.36 கோடி பேர்
  • இந்தியாவில், மொபைல் போன், லேண்ட்லைன் போன், பிராட்பேண்ட் வசதி ஆகியவற்றை பயன்படுத்துவோரின் விபரங்களை (2018, நவம்பர் வரை), TRAI’ எனும் தொலை தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
    • மொத்தம் - 119.36 கோடி பேர்
    • மொபைல் போன் (Mobile Phone) - 117.17 கோடி பேர்
    • லேண்ட்லைன் போன் (Landline Phone) - 2.19 கோடி பேர்
  • இந்தியாவில், ஒயர் இல்லாத, ‘பிராட்பேண்ட்’ சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஓர் ஆண்டில், 16 கோடி உயர்ந்துள்ளது
  • ஒயர்லஸ் பிராட்பேண்ட் (Wireless broadband) பயன்படுத்துவோர் எண்ணிக்கை -51.19 கோடி 
தொழில் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை - புதிய அமைப்பு 
  • மத்திய அரசு, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும், புதிய அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. 
  • மத்திய அரசு, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் பெயரை, "தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை" என, மாற்றியுள்ளது.
  • இத்துறை இனி, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவன விவகாரங்கள்; சுலபமான வர்த்தகத்திற்கு உரிய வசதிகளை ஏற்படுத்துவது; சில்லரை விற்பனை உட்பட, உள்நாட்டு வணிக வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமானம்: ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு 
  • இந்திய கடற்படைக்காக தேவைப்படும் நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் (Six advanced submarines, strategic partnership) தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council, DAC) கூட்டத்தில் (31.1.2019) ஒப்புதல் அளித்துள்ளது. 
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - 2019 
  • 2019 பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் (Budget Session 2019) ஜனவரி 31 அன்று தொடங்கியது, பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
  • ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். உரையின் குறிப்புகள்:
  • தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை 2019 ஆண்டு கொண்டாடுகிறோம். 
  • ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவுநாளை அனுசரிக்கப்போகிறோம். 
  • அரசியல் சாசனத்தின் 70-வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். 
  • குருநானக் தேவ்ஜியின் 550-வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம்” என குறிப்பிட்டார். 
  • 2022-ம் ஆண்டுக்குள், நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, அனைவருக்கும் வீடு என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. 4½ ஆண்டு காலத்தில் 1 கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
  • பிரதம மந்திரி சவ்பாக்கிய யோஜனா திட்டத்தின்கீழ் 2 கோடியே 47 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு தரப்பட்டுள்ளது.
  • 22 விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின்கீழ் கொண்டு வரும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • 7 IITS (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), 7 IIMS (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்), 14 IIITDS (இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), 1 NIT (தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), 4 NID (தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம்) உருவாக்கப்படுகின்றன.
  • நாட்டின் 4½ ஆண்டு கால சராசரி பொருளாதார வளர்ச்சி வீதம் 7.3 சதவீதமாக அமைந்துள்ளது
  • உலகின் 2-வது பெரிய செல்போன் உற்பத்தி நாடாக இந்தியா உருவாகி உள்ளது.
நியமனம்/பதவியேற்பு/ Appointments
மலேசிய மன்னர் "சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா" 
  • மலேசியாவின் 16-வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட (Sultan Abdullah) சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா (வயது 59), ஜனவரி 31 அன்று கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் பதவியேற்றுள்ளார்.
ஒளிபரப்பு ஆய்வு குழும (BARC) புதிய தலைவர் "புனித் கோயங்கா"  
  • இந்தியாவின் ஒளிபரப்பு ஆய்வு குழுமத்தின் (Broadcast Audience Research Council of India, BARC), புதிய தலைவராக புனித் கோயங்கா (Punit Goenka) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
பொருளாதார நிகழ்வுகள்/ Economic Affairs
2019 ஜனவரி மாத GST வசூல்: ரூ.1 லட்சம் கோடி 
  • 2019 ஜனவரி மாத GST வசூல் ரூ.1 லட்சம் கோடியை (GST Collections, January 2019) தாண்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 
  • 2018 டிசம்பர் மாதம், GST வசூல், ரூ.94,725 கோடியாக இருந்தது.
  • 2017-18 GDP வளர்ச்சி (GDP growth) 7.2%
  • 2017-18 ம் ஆண்டிற்கான GDP வளர்ச்சி (GDP growth) 6.7% ஆக இருந்தது. இதனை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. 
  • 2017-18 காலகட்டத்தில் GDP வளர்ச்சி (GDP growth) 7.2% ஆக இருந்ததாக அறிவித்துள்ளது.
  • டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
  • சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. (Us Dollar into Indian Rupee Exchange Rate Today 31st January 2019).
  • 2019 ஜனவரி 31 அன்றைய வர்த்தக துவக்கத்தில் போது இந்திய ரூபாய் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து 70.86 ஆக இருந்தது, வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 71.12 ஆக இருந்தது.
தமிழ்நாடு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs
சென்னையில் "பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்ய சீர்மிகு பரிசு எந்திரம்" (Smart Destbin)
  • பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்காக "Smart Destbin" என்ற சீர்மிகு மறுசுழற்சி பரிசு எந்திர பயன்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (31.1.2019) சென்னையில் முதன்முறையாக தொடங்கிவைத்தார் 
  • இந்த நவீன ‘ஸ்மார்ட் டஸ்ட்பின்’-ல் போடப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பான அலுமினிய டின்கள் நசுக்கப்பட்டு சேகரிக்கப்படும். 
  • ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குளிர்பான அலுமினிய டின்களுக்கு, அதில் உள்ள ‘ரிவர்ஸ் வெண்டிங்’ எந்திரம் மூலமாக சலுகை கூப்பன்கள் வழங்கப்படும். 
  • ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்துள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
மல்யுத்தம்
புரோ மல்யுத்த லீக் 2019: வாகை சூடிய "அரியானா அணி"
  • புரோ மல்யுத்த லீக் (Pro Wrestling League, PWL 2019) தொடரில் (Pro Wrestling League 2019) அரியானா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 
  • உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த இறுதி போட்டியில் 6-3 என்ற கணக்கில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது.
கிரிக்கெட்

அதிவேக100 ஒருநாள் போட்டி விக்கெட்டுகள் - முகமது ஷமி சாதனை 
  • இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி "அதிவேகமாக 100 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளை" வீழ்த்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். முகமது ஷமி தனது 56 வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை எட்டியுள்ளார். ( Mohammed Shami, fastest Indian bowler to claim 100 ODI wickets).
இந்திய-நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடர் 2019: குறிப்புகள் 
  • இந்திய-நியூசிலாந்து அணிகள் (India-New Zealand five-ODI series 2019) இடையே நடந்த நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
  • இந்தியா 92 ரன்களுக்கு அணைத்து விக்கட்டுகளையும் இழந்தது. 
  • இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக பந்துகள் (212) மீதமிருக்கையில் வெற்றியை பதிவு செய்த அணி என்ற சிறப்பை நியூசிலாந்து அணி பெற்றது.
  • இந்திய ஒருநாள் அணியில் பஞ்சாப்பை சேர்ந்த சுப்மன் கில், 19, 227 வது வீரராக இப்போட்டியில் அறிமுகம் ஆனார். 
  • இப்போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். இப்போட்டி ரோகித் சர்மா-வின் 200-வது போட்டி ஆகும்.
முக்கிய தினங்கள்/ Important Days February 2019
உலக புற்றுநோய் தினம் - பிப்ரவரி 4 
  • ஒவ்வொரு வருடமும் உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4 (World Cancer Day February 4) அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தின (World Cancer Day 2019 Theme) மையக்கருத்து: "I Am and I Will"
  • 2019 - 2021 ஆண்டுகளுக்கு உலக புற்றுநோய் தின (World Cancer Day 2019 Theme) மையக்கருத்தாக "I Am and I Will" இருக்கும்.
TNPSC Current Affairs 1st February 2019 PDF
TNPSC Link File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post