TNPSC Current Affairs 17-18th January 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs January 17th and 18th  January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs 
EWS 10% ஒதுக்கீடு: குஜராத் மாநிலத்தில் அமல் 
  • பொது பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான (EWS-Economically Weaker Sections) 10% ஒதுக்கீடு குஜராத் மாநிலத்தில் (India’s first state to implement 10% quota) முதன் முதலாக அமலாகவுள்ளது. 
  • போதை மருந்து முறைகேடுகளை களைய "ஐந்தாண்டு திட்டம்" 
  • இந்திய அரசு, நாட்டில் போதை மருந்து முறைகேடுகளை களைய (five-year action plan to address drug abuse) 2018-2023 ஆகிய ஐந்தாண்டு கால திட்டத்தை தயாரித்துள்ளது. 
EWS 10% இடஒதுக்கீடு: குஜராத் மாநிலத்தில் அமல் 
  • பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் (EWS) 10% இடஒதுக்கீடு இந்தியாவில் முதல் மாநிலமாக குஜராத்தில் (14.1.2019) நிறைவேற்றப்பட்டது.
‘சீ பாக்ஸ்’ (Shebox) பாலியல் தொல்லை புகார் இணையதளம் 
  • அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ‘சீ பாக்ஸ்’ (Shebox, www.shebox.nic.in/) என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளனர்.
வணிகம் செய்ய எளிதான மாநிலங்கள் பட்டியல் 2018 
  • 2018 வணிகம் செய்ய எளிதான மாநிலங்கள் பட்டியலில் (ACI's Ease Of Doing Business (EDB) Index 2018) ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 2 வது இடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (FEO) "விஜய் மல்லையா"
  • தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (FEO, Fugitive Economic Offender)" என்று முதன்முறையாக இந்திய வர்த்தகர் "விஜய் மல்லையா (Vijay Mallaya)" அறிவிக்கப்பட்டுள்ளார். 
கேரள அகஸ்தியர் கூடம்: பெண்கள் செல்ல தடை நீக்கம் 
  • கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யார் வனவிலங்கு காப்பகத்தில் அகஸ்தியர் கூடம் மலை உள்ளது. 1,868 மீட்டர் உயரம் கொண்ட அகஸ்தியர் கூடம் மலையில் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கப்பட்டுள்ளது.
மாநாடுகள் / Conferences
இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் முதலாவது பேச்சுவார்த்தை 2019
  • இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை (India-Central Asia Dialogue 2019) உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் (Uzbekistan, Samarkand) நடைபெற்றது. இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்பங்கேற்றார். 
  • இரண்டாவது இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய பேச்சுவார்த்தை (2nd India-Central Asia Dialogue 2020, India) 2020-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.
உலகப் புத்தக கண்காட்சி 2019, நியுடெல்லி
  • 27-வது நியுடெல்லி உலகப் புத்தக கண்காட்சி 2019, ஜனவரி 5 முதல் 13 வரை நடைபெறுகிறது. "Readers with Special Needs” என்ற கருப்பொருளில் இந்த உலகப் புத்தக கண்காட்சி 2019 நடைபெறுகிறது.
விருதுகள் / Awards 
மகாத்மா காந்தி அமைதி விருது 2015-2018
  • மகாத்மா காந்தியின் 125-ஆவது பிறந்த தினத்தையொட்டி 1995 முதல் (Gandhi Peace Prize) மகாத்மா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு காந்திய வழியில் பங்களிப்பு செய்துவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • கடைசியாக, 2014-ஆம் ஆண்டு காந்தி அமைதி விருது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (ISRO) வழங்கப்பட்டது.
  • 2015 முதல் 2018 வரை 4 ஆண்டுகளுக்கு, மகாத்மா காந்தி அமைதி விருதுகளை மத்திய அரசு (16.1.2019) அறிவித்துள்ளது. 
  • விருது பெற்றோர்/ அமைப்புகள் (Gandhi Peace Prize winners list 2015-2018):
    • 2015: விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி (Vivekananda Kendra, Kanyakumari)
    • 2016: அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை & சுலப் இன்டர்நேஷனல், இந்தியா (Akshaya Patra Foundation & Sulabh International), 
    • 2017: ஏகாய் அபியான் அறக்கட்டளை, , இந்தியா (Ekai Abhiyan Trust)
    • 2018: யோஹெய் சசாகவா, நிப்பான் அமைப்பு, ஜப்பான் (Yohei Sasakawa)
  • விவேகானந்த கேந்திரம்: பணியாற்றியமைக்காக அந்த அமைப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளது
  • அக்ஷய பாத்திரம் அமைப்பு: நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகிறது. மனித சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு: கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தும் முறையை ஒழிக்க சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு பணியாற்றி வருகிறது.
  • ஏகாய் அபியான் அறக்கட்டளை: ஊரக மற்றும் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக செயலாற்றி வருகிறது. 
  • யோஹெய் சசாகவா: ஜப்பான் நாட்டை சேர்ந்த நிப்பான் அமைப்பை (Nippon Foundation) நிறுவி தொழுநோய் ஒழிப்புக்கு பங்களிப்பு செய்து வருகிறார்.
தமிழ்நாடு நிகழ்வுகள் /Tamil Nadu Affairs
தமிழ்நாட்டில் "இராணுவ தொழில் வழித்தடம்" - தொடக்கம் 
  • தமிழ்நாடு ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் ஜனவரி 20-ந் தேதி ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். 
  • சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது.
  • கோயம்புத்தூரில் ராணுவ தளவாட கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரமும் தொடங்கப்படஉள்ளது.
சேலத்தில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா மணி மண்டபம்
  • மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணி மண்டபம் மற்றும் அவர்களது திருவுருவ சிலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி (16.1.2019) திறந்து வைத்தார்.
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயம் வெளியீடு 
  • சென்னை, கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவம் பொறித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2019
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஜனவரி 17, 2019 அன்று கோட்டை முனியசுவாமி திடலில் நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
விளையாட்டு விருது

லாரெஸ் உலக விளையாட்டு விருது: "வினேஷ் போகத்" பரிந்துரை 
  • ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat) லாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கு (2019 Laureus World Sports Awards) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 
  • வினேஷ் போகத் 'ஆண்டில் மீண்டு வந்த வீரங்கனை பிரிவில் (Comeback of the year' category) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 
  • லாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் இந்தியர் "வினேஷ் போகத்" (Vinesh Phogat, first Indian nominated for Laureus World Sports Awards) ஆவார்.
  • லாரெஸ் விருது வழங்கும் விழா 2019 பிப்ரவரி 18-ந் தேதி மொனாக்கோவில் நடக்கிறது.
கால்பந்து

லா லிகா கால்பந்து: 400-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை

  • ஸ்பெயின் நாட்டில் கிளப் அணிகள் பங்கேற்கும் லா லிகா லீக் கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. லா லிகா லீக் கால்பந்து போட்டிளில், லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 435-வது லா லிகா ஆட்டத்தில் 31 வயதான லயோனல் மெஸ்சி 400-வது கோல்கள் அடித்துள்ளார். 
கார் பந்தயம்

FIA ஃபார்முலா 3 ஐரோப்பிய போட்டி: "ஜெகன் தருவலா" சாம்பியன்
  • FIA ஃபார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் (FIA Formula 3 European Championship) சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை ஜெகன் தருவலா (Jehan Daruvala) பெற்றுள்ளார்.
  • Sahara Force India Academy-ஐ சேர்ந்தவர் ஜெகன் தருவலா.
TNPSC Current Affairs 17th and 18th  January 2019 PDF
TNPSC Link File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post