TNPSC Current Affairs 15-16th January 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs 2019 Download PDFTNPSC Current Affairs January 15th and 16th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs 
குரு கோவிந்த் சிங்கின் "352 வது பிறந்த நாள்" Prakash Utsav
  • 10 வது சீக்கிய குரு "குரு கோவிந்த் சிங்" (10th Sikh guru Govind Singh) அவர்களின், 352 வது பிறந்த நாள் ஜனவரி 13 அன்று பல பகுதிகளிலிருந்தும் பிரகாஷ் உட்சவ் (Prakash Utsav) என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. குரு கோவிந்த் சிங் 1666-ஆம் ஆண்டு பிறந்தார். 
ஒரு குடும்பம், ஒரு வேலை திட்டம் 
  • சிக்கிம் முதலமைச்சர் பவன் சாம்லிங், அண்மையில் "ஒரு குடும்பம் ஒரு வேலை திட்ட"த்தை (One Family, One Job scheme) சிக்கிம் மாநிலத்தில் (Sikkim) துவக்கிவைத்தார். 
இந்திய-சீன எல்லையில் "44 சாலைகள்" திட்டம்
  • இந்தியா-சீனா இடையிலான எல்லை கோடு, சுமார் 4 ஆயிரம் கி.மீ. நீளம் கொண்டது. இந்த எல்லை கோடு "McMahon line" என்று அழைக்கப்படுகிறது. 
  • காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக "McMahon line" செல்கிறது. 
  • இந்த எல்லையில், ரூ.21 ஆயிரத்து 40 கோடி செலவில், போர் முக்கியத்துவம் வாய்ந்த 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய  முப்படை கூட்டு ராணுவ பயிற்சி
  • அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள Campbell Bay கடற்பகுதியில், இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை (Joint Amphibious Exercise, Three Armed Forces) மேற்கொள்கின்றன. 14.1.2019 அன்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூட்டு ராணுவ பயிற்சியை பார்வையிட்டார். 
அரியானாவின் புராதன சரஸ்வதி நதி மறுசீரமைப்பு திட்டம்
  • அரியானா மாநிலம், புராதன சரஸ்வதி நதி மறுசீரமைப்பு திட்டங்களுக்கு (Projects to Revive Mythical Saraswati River) அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
2019 மார்ச் 1 முதல் புதுச்சேரியில் "பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை" 
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் மீது புதுச்சேரி அரசு தடை விதிக்க முடிவு (Puducherry Ban Single-Use Plastic) செய்துள்ளது. 
  • தமிழநாட்டில் 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழநாடு அரசு தடை விதித்தது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் (16.1.2019) - குறிப்புகள் 
  • 13 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களை அமைக்க ஒப்புதல்
    • பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் (16.1.2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.3,600 கோடி மதிப்பில் 13 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களை அமைக்க (Union Cabinet approves 13 new Central Universities) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளம், ஒடிஸா, கர்நாடகம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களில் இந்தப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. 
    • ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 2 பல்கலைக்கழகங்களும், மற்ற மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகமும் அமையவுள்ளது.
    • தமிழ்நாட்டில் ஏற்கெனவே 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அவை;
    • இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், செம்மஞ்சேரி,சென்னை (2008) 
    • தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், நீலாகுடி, திருவாரூர் மாவட்டம் (2009).
  • எக்ஸிம் வங்கிக்கு கூடுதல் மூலதனம் 
    • ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் உதவி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட எக்ஸிம் வங்கிக்கு, இந்த ஆண்டில் ரூ.6,000 கோடி கூடுதல் மூலதனம் (Capital Infusion for Exim Bank 2019) அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சுரங்கப் பாதுகாப்பு - ஆஸ்திரேலிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 
    • சுரங்கப் பாதுகாப்புக்காக ஆஸ்திரேலிய அரசுடன், இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மாநாடுகள் / Conferences
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019
  • அமெரிக்காவின் சிகாகோ நகரில் 2019 ஜூலை 4 முதல் 7 வரை 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ((10th World Tamil Conference, Chicago, 2019) நடைபெற உள்ளது.
  • அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
பிரயாக்ராஜ் நகரில் "கும்பமேளா" தொடக்கம் 
  • 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிற கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் 2019 ஜனவரி 15 அன்று (15.1.2019) கோலாகலமாக தொடங்கியது (Prayagraj Ardh Kumbh Mela, 2019). 
  • கும்பமேளா 2019 மார்ச் மாதம் 4-ந் தேதி வரை 50 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
  • பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, (கண்ணுக்கு புலப்படாத) சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிப்பதாகவும், இது திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. 
  • கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் நகரில், மக்களுக்கு ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய 6 மொழிகளில் ரெயில்கள் வருகை, புறப்பாடு அறிவிப்புகளை வெளியிட இந்திய ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
விருதுகள் / Awards 
பிலிப் கோட்லர்-பிரசிடென்ஷியல் விருது 2019: நரேந்திர மோடி
  • 2019 ஆண்டுக்கான பிலிப் கோட்லர்-பிரசிடென்ஷியல் விருது (Philip Kotler Presidential award), பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • பிலிப் கோட்லர் விருதைப் பெறும் முதல் அரசியல் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். 
  • நவீன கால சந்தைப்படுத்துதலின் தந்தை என பிலிப் கோட்லர் அறியப்படுகிறார்
  • சந்தைப்படுத்தல் (Marketing) மற்றும் மேலாண்மைத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களைப் பாராட்டும் நோக்கில், ஆண்டுதோறும் பிலிப் கோட்லர் விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த விருது அளிக்கப்படுகிறது.
திருவள்ளுவர் திருநாள் விருதுகள் 2019 
  • 2019 திருவள்ளுவர் திருநாளையொட்டி (Thiruvalluvar Day Awards 2019) தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் வழங்கப்படும் தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்றத் தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் விருது உள்ளிட்ட ஒன்பது விருதுகளைப் பெறத் தகுதியானவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2019 ஆண்டுக்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகள் பெறுவோர் விவரம்:
    • திருவள்ளுவர் விருது: எம்.ஜி. அன்வர் பாட்சா 
    • தந்தை பெரியார் விருது: சி.பொன்னையன் 
    • அண்ணல் அம்பேத்கர் விருது: மருத்துவர் சி.ராமகுரு 
    • பேரறிஞர் அண்ணா விருது: பேராசிரியர் மு.அய்க்கண் 
    • பெருந்தலைவர் காமராசர் விருது: பழ.நெடுமாறன் 
    • மகாகவி பாரதியார் விருது: பாவரசு மா.பாரதி சுகுமாரன் 
    • பாவேந்தர் பாரதிதாசன் விருது: கவிஞர் தியாரூ 
    • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது: முனைவர் கு.கணேசன் 
    • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: சூலூர் கலைப்பித்தன்
நாஞ்சில் நாடன் விருது 2019: ப. சரவணன் 
  • 2019-ஆம் ஆண்டிற்கான "எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது" தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. 
சுற்றுச்சூழல் / Environmental Affairs 
2018-இல் மோசமான வானிலைக்கு 1,400 பேர் உயிரிழப்பு 
  • நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டில் மோசமான வானிலையால் 1,428 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
  • புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு, புழுதிப்புயல், மின்னல் தாக்குதல் போன்ற சம்பவங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 
தமிழ்நாடு நிகழ்வுகள் /Tamil Nadu Affairs
சென்னையில் "நவீன வாடகை சைக்கிள் திட்டம்"
  • பொதுமக்களிடையே சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை அதிகரிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் முயற்சியால் ‘நவீன வாடகை சைக்கிள் திட்டம்’ (Chennai cycle sharing 2019) நடைமுறைக்கு வரவுள்ளது. 
  • ஐதராபாத்தை சார்ந்த ‘ஸ்மார்ட் பைக்’ (SmartBike) எனும் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் 5 ஆயிரம் வாடகை சைக்கிள்களை மாநகராட்சி இயக்கவுள்ளது.
  • சென்னையில் உள்ள 300 நிறுத்தங்களில் எங்கு வேண்டுமானாலும் வசதிக்கேற்ப விட்டுச் செல்லலாம். ஒரு மணி நேர வாடகையாக ரூ.5 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு "50 ஆண்டுகள்" நிறைவு 

  • சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள், ஜனவரி 14, 1969 ஆகும். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் (14.01.2019) நிறைவடைந்துள்ளது. (Madras State was renamed ‘Tamil Nadu’ 
  • மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி விருதுநகரைச் சேர்ந்த காந்தியவாதி தியாகி கண்டன் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார்.
"எழுத்துடை நடுகல்" ஜவ்வாதுமலையில் கண்டுபிடிப்பு 

  • ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து "எழுத்துடை நடுகல்" ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
  • ஜவ்வாதுமலை (Javadi Hills/Javadhu Hills/Eastern Ghats)
    • கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை ஆகியவற்றை அடுத்து வரும் மலைத்தொடரே ஜவ்வாதுமலை ஆகும்.
    • வேலூர் மற்றும் திருவண்ணமலை ஆகிய இரு மாவட்டங்களில் 262 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. ஜவ்வாதுமலை மலைத்தொடரின் சராசரி உயரம் சுமார் 1060 அடி முதல் 1160 அடி வரை ஆகும்.
    • காவனூர் வானியல் ஆராய்ச்சி மையம், ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி மையம் (Vainu Bappu Observatory) இங்குள்ளது.
‘நம்ம சென்னை’ செயலி: மாநகராட்சி சொத்து வரி செலுத்தும் வசதி அறிமுகம்

  • பெருநகர சென்னை மாநகராட்சியால் வடிவமைக்கப்பட்டுள்ள மக்கள் குறை தீர்க்கும் ‘நம்ம சென்னை’ என்ற செயலி பிறப்பு-இறப்பு சான்றிதழ், சொத்து, தொழில்வரி மற்றும் வர்த்தக உரிமம் ஆகிய 5 சேவைகளுடன் செயல்பாட்டில் உள்ளது.
  • தற்போது ‘நம்ம சென்னை’ செயலியில் கூடுதல் சேவையாக பொதுமக்கள் மேலும் பயன்பெறும் வகையில் நெட் பேங்கிங், டெபிட், கிரெடிட் கார்டு, ஆர்.டி.ஜி.எஸ்/நெப்ட், யு.பி.ஐ. ஆகிய கட்டண விருப்பங்களுடன் சொத்துவரி செலுத்தும் முறை (Namma Chennai Apps) அறிமுகப்படுத்தப்  பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
செஸ்

இந்தியாவின் இளம் வயது கிராண்ட்ஸ்மாஸ்டர் "டி.குகேஷ்" 

  • சென்னை மாணவர் டி.குகேஷ் (D. Gukesh), 12 வயது 7 மாதம் 17 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இதன் மூலம் "குறைந்த வயதில் கிராண்ட்ஸ்மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியர்" என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 
  • மேலும் உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட்ஸ்மாஸ்டர் (world's second youngest grand master) என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். 
  • 2017 ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா (R Praggnanandhaa),12 வயது 10 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை குகேஷ் முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
  • டெல்லியில் நடைபெற்ற, 2019 சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் (17th Delhi International Open Chess tournament) இந்த சாதனையை படைத்தார். 
  • டி.குகேஷ், இந்தியாவின் 59-வது கிராண்ட்ஸ்மாஸ்டர் ஆவார். 
  • 2002-ம் ஆண்டில் உக்ரைன் வீரர் செர்ஜி கர்ஜாகின் (Sergey Karjakin),12 வயது 7 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதே உலக அளவில் சாதனையாக உள்ளது.
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2019: தொடக்கம்
  • 2019 ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் 14.01.2019 அன்று தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான 107-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆகும். 
  • ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் பங்கேற்கிறார். 
  • ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை கடைசி செட் சமநிலையில் (6-6) இருந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் நீடித்துக் கொண்டே இருக்கும். அந்த நிலைமை இனி கிடையாது. முதல் முறையாக இந்த சீசனில் கடைசி செட்டில் ‘டைபிரேக்கர்’ முறை அறிமுகம் ஆகிறது.
கிரிக்கெட் 
இந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு
  • டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. விசாரணை முடியும் வரை இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
  • அவர்களுக்கு பதிலாக இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், பேட்ஸ்மேன் சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 
இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி 
  • ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
முக்கிய தினங்கள் / Important Days
இந்திய இராணுவ தினம் - ஜனவரி 15 
  • இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா (Kodandera M. Cariappa), 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். 
  • இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக (Indian Army Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
  • 71-வது இந்திய இராணுவ தினம், 2019 ஜனவரி 15 அன்று கடைபிடிக்கப்பட்டது. 
திருவள்ளுவர் தினம் - ஜனவரி 16, 2019 
  • 2019 ஆம் ஆண்டார் ஜனவரி 14 அன்று, திருவள்ளுவர் தினம்  (Thiruvalluvar Day 2019) கடைபிடிக்கப்பட்டது. 
  • திருவள்ளுவர் ஆண்டு, 2050, தைத்திங்கள் 2 ஆம் நாள் ஆகும்.
TNPSC Current Affairs 15th and 16th  January 2019 PDF
TNPSC Link File Size 2.6 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post