TNPSC Current Affairs 12th January 2019 | Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs January 12th, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக நிகழ்வுகள் / International Affairs
பாஸ்போர்ட் குறியீடு பட்டியல் 2019: இந்தியா 79-வது இடம்

  • 2019 ஹென்லே மற்றும் பார்ட்னர்ஸ் பாஸ்போர்ட் குறியீடு பட்டியலில் (Henley and Partners Passport Index 2019\Henley Passport Index 2019) இந்தியா 79-வது இடம் பெற்றுள்ளது. 
  • இந்திய பாஸ்போர்ட் (Indian passport) உலகிலேயே 79-வது மிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. 
  • இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 61 நாடுகாளில் முன்-பயண விசா இல்லாமல் செல்ல முடியும்.
  • முதல் 3 இடங்களை பெற்றுள்ள நாடுகள் விவரம்:
  • ஜப்பான் 
  • சிங்கப்பூர், தென் கொரியா 
  • பிரான்ஸ், ஜெர்மனி 
சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் 

  • சிரியாவில் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் (Syria, US troops withdrawal) தொடங்கியுள்ளது.
  • சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க படைகள் சிரியாவுக்கு 2015-ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டன. 
நிலவின் இருண்ட பகுதியை  படமெடுத்த" சீன ஆய்வுக் கலம்
  • பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய (Far Side of the Moon) பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 (Chang'e 4) விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.
  • சீனாவின் சாங் இ-4 விண்கலம் 8.12.2018 அன்று விண்ணில் ஏவப்பட்டது. 
இந்திய நிகழ்வுகள் / National Affairs
ரேணுகாஜி பல்நோக்கு அணை திட்டம் - குறிப்புகள் 
  • 2019 ஜனவரி 11 அன்று, ரேணுகாஜி பல்நோக்கு அணை (Renukaji multipurpose dam project) திட்டத்திற்கான ஒப்பந்தம் டெல்லி உள்ளிட்ட 6 மாநிலங்கள் இடையே கையெழுத்திட்பட்டுள்ளது. 
  • உத்திரப்பிரதேசம், அரியானா, இமாச்சல பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்கள் ஆகும்.
  • இந்த ஒப்பந்தத்தின் படி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் யமுனை ஆறு மற்றும் அதன் இரண்டு துணையாறுகளான (Yamuna and two of its tributaries, Tons and Giri) டான்ஸ் மற்றும் கிரி பகுதிகளில், மூன்று நீர் சேமிப்புத் திட்டங்கள் கட்டப்படவுள்ளன. 
இந்திய விண்வெளி ஆய்வு மையத் திட்டங்கள் - தகவல் குறிப்புகள் 
  • இந்திய விண்வெளி ஆய்வு மைய திட்டங்கள் குறித்து, இந்திய விண்வெளி ஆய்வு மையத் (ISRO 2019 Missions) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ள குறிப்புகள் விவரம்:
  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO),  2018-ஆம் ஆண்டில்,18 திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. 7 ராக்கெட், 9 விண்கலங்கள், ஒரு வெள்ளோட்டத் திட்டம் அடங்கும். 
  • ISRO-வின் கட்டுப்பாட்டில் தற்போது, 47 விண்கலங்கள் செயல்பட்டு வருகின்றன. 
  • உன்னதி என்ற புதிய திட்டத்தை 17.1.2019 அன்று தொடங்கயுள்ளது. ((ISRO UNNATI programme 2019, UNispace Nanosatellite Assembly & Training).  
  • UNNATI திட்டத்தில் 45 நாடுகள் பங்கேற்கவிருக்கின்றன. 
  • நாடு முழுவதும் 6 விண்வெளி சிக்கல் தீர்வு மையங்களைத் திறக்கவுள்ளோம். முதல் மையம் திரிபுராவில் அகர்தலாவில் தொடங்கப்பட்டுள்ளது. 
  • 2019 ஏப்ரல் மாத்தில் சந்திரயான்-2 (Chandrayaan-2விண்கலத்தை நிலவுக்கு அனுப்பப்படவுள்ளது.) 
  • ககன்யான்: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (Gaganyaan Mission 2019) திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. ககன்யான் திட்டத்தை 2021-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. 
  • பெங்களூரில் மனித விண்ணூர்தி மையம் (New Space Centre, Bengaluru for Gaganyaan mission) தொடங்கப்படும். இதன் மைய இயக்குநராக டாக்டர் உண்ணிகிருஷ்ணன் செயல்படுவார். விண் மனிதன் திட்ட இயக்குநராக ஹட்டியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 
நியமனங்கள் / Appointments
தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்
  • தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நேற்று நியமித்துள்ளார்.
  • வெனிசூலா அதிபராக "நிக்கோலஸ் மடூரோ" பொறுப்பேற்பு
  • வெனிசூலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ (11.1.2019) இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளார்.
உச்சநீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் பெயர்கள் - பரிந்துரை
  • கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி(Dinesh Maheshwari), தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா (Sanjiv Khanna) ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் (Ranjan Gogoi) தலைமையிலான 5 உறுப்பினர்கள் கொண்ட (Supreme Court Collegium) கொலீஜியம் குழுவின் (11.1.2019) ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • கொலீஜியம் குழு நீதிபதிகள் 
  • ரஞ்சன் கோகோய் (CJI Ranjan Gogoi)
  • ஏ.கே. சிக்ரி (A K Sikri)
  • எஸ்.ஏ. போப்டே (S A Bobde) 
  • என்.வி. ரமணா (N V Ramana)
  • அருண் மிஸ்ரா (Arun Mishra) 
UPSC உறுப்பினராக டி.சி.ஏ. அனந்த் நியமனம்
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (UPSC Member) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் (T.C.A. ANANT) நியமிக்கப்பட்டுள்ளார். UPSC-யில் தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
CBI இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் பதவியேற்பு
  • டெல்லியில் CBI இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் (Nageswara Rao) மீண்டும் (11.1.2019) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 
  • CBI இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் (Alok Verma) வர்மாவின் பதவி (11.1.2019) அன்று பறிக்கப்பட்டது. 
மாநாடுகள் / Conferences
2019 அகில பாரத கவி சம்மேளனம், சென்னை
  • 2019 குடியரசு தினத்தையொட்டி இந்திய வானொலி நிலையம் சார்பில் அகில பாரத கவி சம்மேளனம் (AIR's ‘Kavi Sammelan 2019) என்ற பெயரில் பன்மொழி கவியரங்கம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் (11.1.2019) நடந்தது. 
  • 22 மொழி கவிஞர்கள் பங்கேற்று கவிதைகள் அரங்கேற்றப்பட்டன.
விருதுகள் / Awards
பூர்ண சந்திர தாபா-க்கு இந்திய ராணுவ ஜெனரல்" விருது 
  • நேபாள ராணுவத்தின் தலைமைத் தளபதி பூர்ண சந்திர தாபா (Nepal Army Chief, Purna Chandra Thapa) அவர்களுக்கு, "இந்திய ராணுவ ஜெனரல்" என்ற (General of Indian Army Award 2019) உயரிய விருது 13.01.2019 அன்று வழங்கப்படவுள்ளது.  
  • இந்தியா - நேபாளம் இடையே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபின் அடிப்படையிலேயே நேபாள ராணுவத் தளபதிக்கு இந்திய ராணுவ ஜெனரல் விருது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
தமிழ்நாடு-கார்னெல் பல்கலை-நீர், நில மேலாண்மை திட்ட ஒப்பந்தம்
  • உலக வங்கி நிதி உதவியுடன், தமிழ்நாட்டில் நீர், நில மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (11.1.2019) கையெழுத்தானது.
  • தூத்துக்குடி-கண்ட்லா இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து
  • குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை (11.1.2019) தொடங்கப்பட்டுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
டென்னிஸ்

ஆன்டி முர்ரே ஓய்வு - அறிவிப்பு 
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே (Andy Murray) ஓய்வு பெறவுள்ளார்.
  • 77 ஆண்டுகளில் விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீரர் முர்ரே ஆவார்.
TNPSC Current Affairs 12th January 2019 PDF
TNPSC Link File Size 1.4MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post