உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் பட்டியல் 1950 to 2018 (Supreme Court Women Judges List)


உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக "இந்து மல்கோத்ரா" பதவியேற்பு   
 • உச்சநீதிமன்றத்தின் மூத்த வக்கீலாக பணியாற்றி வந்த இந்து மல்கோத்ரா "நேரடியாக நீதிபதியாக" நியமனம் பெற்றுள்ளார். "நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற முதல் பெண் வக்கீல்" இந்து மல்கோத்ரா ஆவார். 
 • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புதிய நீதிபதி "இந்து மல்கோத்ரா" அவர்களுக்கு ஏப்ரல் 27 அன்று பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.
 • நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் முதல் பெண் வக்கீல் "இந்து மல்கோத்ரா" (வயது 61). 
இந்து மல்கோத்ரா - 7-வது உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி
 • உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக 1989-ல் பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்றத்தின் 7-வது பெண் நீதிபதி ஆவார். மற்ற பெண் நீதிபதிகள் அனைவரும் உயர்நீதிமன்றங்களில் இருந்து பதவி உயர்வு பெற்று வந்தவர்கள் ஆவர்.
உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் பட்டியல் (1950-2018)

2018 ஆம் ஆண்டு வரை 65 ஆண்டு கால உச்சநீதிமன்ற வரலாற்றில் மொத்தம் "07 பெண் நீதிபதிகள்" பதவியேற்றுள்ளார்கள். அவர்கள் விவரம்:
 1. பாத்திமா பீவி
 2. சுஜாதா வி மனோகர்
 3. ரூமா பால் (நீண்ட காலம் பெண் நீதிபதியாக இருந்தவர்)
 4. கியான் சுதா மிஸ்ரா
 5. ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
 6. ஆர். பானுமதி (தமிழ்நாட்டை சேர்ந்தவர்)
 7. இந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 முதல்)

தற்போது உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளாக உள்ளவர்கள்: இருவர் ஆவார்கள் விவரம் (ஏப்ரல் 30, 2018)
 1.  ஆர். பானுமதி 
 2. இந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 முதல்)

0 comments:

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude