TNPSC General Tamil - Kambar, KambaRamanayam - Short Notes



கவிச்சக்கரவர்த்தி "கம்பர்

  • “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றும், “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல், இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றும், கம்பனை பற்றி பாரதியார் போற்றியுள்ளார்.
  • கம்பர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது. 
தமிழுக்குக் கதி - இருவர்
  • தமிழுக்குக் கதியாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் கம்பர் என்றும், மற்றொருவர் திருவள்ளுவர் என்றும் இரண்டு பெருமக்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்தால் “கதி” என்று கருதப்படும் என்றும் அறிஞர் செல்வக் கேசவராய முதலியார் எழுதியுள்ளார்.
  • கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய கம்பராமாயணம் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பங்குனி மாதம் அத்த நட்சத்திரத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
கம்பராமாயணம்
  • இராமவதாரம் என்ற கம்பராமாயணம், பாலக் காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணியக் காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரக் காண்டம், யுத்தக் காண்டம் என ஆறு காண்டங்களாக 10 ஆயிரத்து 368 பாடல்களைக் கொண்டது. 
  • ஒரு பாடலுக்கு நான்கு சீர்களில் இருந்து, எட்டுச் சீர்கள் வரையிலான 4 அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டது.
  • ஆயிரம் பாடலுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடுகிறார்.
  • 40 ஆயிரம் சொற்கள் கம்ப ராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • காரைக்குடியில் உள்ள நாட்டரசன் கோட்டையில் கம்பருக்கு மூன்று நாட்கள் இலக்கியத் திருவிழாவைக் காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர் கம்பன் அடிப்பொடி கணேசன் தலைமையில் 24-3-1940 அன்று முதன் முதலாகத் தமிழ்நாட்டிலேயே கம்பருக்கு ஒரு பெருவிழா எடுக்கப்பட்டது.
  • தமிழக அரசு மார்ச் 24-ந்தேதியையே கம்பர் திருநாளாகப் போற்றும் வகையில், நேர் கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நிற்கும் தோற்றத்தோடும் உள்ள கம்பர் சிலைக்கு மார்ச் 24-ந்தேதி மாலை அணிவிக்கப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு கம்பர் விருதைத் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post