TNPSC Group 4 Official Answer Keys Published Today 14.02.2018



Tentative TNPSC Official Answer keys for Combined Civil Services Examination -4 (Group - IV Services)
(Date of Examination:11.02.2018 FN)
  1. General Tamil
  2. General Studies
  3. General English
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 21st February 2018 will receive no attention.
Current Affairs (TNPSCLINK)
  • 23 Current Affairs Questions were asked in this latest TNPSC Group 4 and VAO Combined CCSE IV Examination 2018 held in 11.02.2018.
  • Here you can find the Current Affairs Questions with Answers (Tentative) Published
Questions with Key Answers (Current Affairs Only)

1) 2017 அக்டோபர் 4 முதல் 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலக சிறப்பு வாரத்தினது கருப்பொருள்?

விடை: A) விண்வெளியில் புது உலகத்தினை தேடல்

2) 2017-ம் ஆண்டு குவகாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச்சிறந்த வீரர் எனப்பாராட்டப்பட்டவர்?

விடை: D) அங்குசிட்டா போரா
3) 2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பொருத்துக: (பொருத்தப்பட்டுள்ளது)


செல்வி. சாய்கோம் மீராபாய் சானு - உலக பளுத்தூக்கும் சாம்பியன்ஷிப்
செல்வி. மேரிகோம் - ஆசிய மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப்
திரு. கோபி தொனக்கல் - ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
செல்வன். அரவிந்த் சிதம்பரம் - உலக இளநிலை (V-20) சதுரங்க சாம்பியன்ஷிப்


விடை: B) 2 3 4 1

4) செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?

விடை: D) அகமதாபாத்

5) இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் யார்?

விடை: B) ஶ்ரீநாத் நாராயணன்
6) எந்த மாநில அரசு Gyankunj E-Class திட்டத்தினை செயல்படுத்தியது?
விடை: D) குஜராத்
7) நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017 நவம்பர் 2017 அன்று ICMR உடன் இணைந்து IHDI-யினை துவக்கியுள்ளது? IHMI என்பது எதைக் குறிக்கும்? 

விடை: A) இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம் (India Hypertension Management Initiative)


8) சமீபத்தில் இந்திய-இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் என்கு தோடங்கப்பட்டது? 

விடை: B) தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்

9) இந்தியாவின் திட்டக்கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: B) நிதி ஆயோக் (NITI Aayog)


10) சமீபத்தில் நடைபெற்ற இந்திய-மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: B) எக்குவரின் 2017 (EKUVERIN 2017)


11) செப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான பாக்ஹவுலை (Backhaul) பெற்றிருக்கவில்லை. பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை


விடை: B) மையமாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை (Connecting cell sites to central exchange)


12) இந்திய விமானப்படையால் 2017-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாடுகாப்பு ஊர்தி? 

விடை: B) Mi-8 Attack and Utility Helicopter


13) 2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட "Dark horse and other plays" என்ற நாடகத்தை வெளியிட்டவர்?

விடை: A) கௌரி ராம்நாராயண்


14 ) தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது? 


விடை: A) நவம்பர் 19


15) பனிப்பாலம் நடவடிக்கை (Operation Ice Bridge) எந்த அமைப்போடு தொடர்புடையது? 

விடை: C) NASA

16) புது டெல்லியில், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட அமைப்பு

விடை: C) அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம் (AIIA)


17) 2017-ம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "துக்கம் சுக்கம்" என்ற நாவலின் ஆசிரியரான இவர் திரு/திருமதி

விடை: C) மம்தா காலியா

18) 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைக்ள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்? 

விடை: C) ஏப்ரல் 1, 2020

விடை: உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்? 

விடை: C) சௌம்யா சுவாநிநாதன்

19) 2017-ம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித்துறை, விசைத்தறி மற்றும் விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம்? 

விடை: D) SAATHI (Sustainable and Accelerated Adoption of efficient Textile technologies to Help small Industries)

20) பட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?  

விடை: D) சென்னை-எண்ணூர் மாநில நெடுஞ்சாலை


21) நான்காவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு எங்கு நடைபெற்றது? 

விடை: D) டர்பன்

22) உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது? 


விடை: B) மார்ச் 21


23) கீழே கொடுக்கப்பட்ட பொருந்தாத நபரை தேர்ந்தெடு

B) நிட்டல் பால்

(திரிஷா தேப், லில்லி சானு பூனம், ஜோதி சுரேகா வென்னம்  ஆகிய மூவரும் இந்திய வில்வித்தை வீராங்கனைகள்)
Post a Comment (0)
Previous Post Next Post